திருமதி. வேலையா மீனாட்சி

வேலையா மீனாட்சி

தோற்றம்: 20 நவம்பர் 1928 - மறைவு: 13 மே 2025

கண்டி - கம்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலையா மீனாட்சி அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற சுப்பையா - பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கே. வேலையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமி, வேல்ராஜ், முத்துவேல், சிவா, சரஸ்வதி மற்றும் நடராஜா, தியாகராஜா, பானுமதி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராமசாமி, எனட், கிறேஸ், முருகையா, தம்பிராஜா மற்றும் தெய்வானை, மனோராணி, இந்திராணி ஆகியோரின் மைத்துனியும்,

சாரதாம்பாள், வனஜா, சுந்தரி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்புத்தாயும்,

காலஞ்சென்றவர்களான தயாளன், குமாரன் மற்றும் வித்யா, சுரேக்கா, சுமன் ஆகியோரின் மாமியும்,

ஷாலினி, சதீஷ்குமார், தர்ஷன், அர்ஜீன், ப்ரியா, தனுஷன், அபிஷேக், அனிக்ஷன், ஆதிரன் ஆகியோரின் பாட்டியும்,

கிரிதிக் பிரணவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று (இல-250/7, நுவரெலியா வீதி, மகர, கம்பளை) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாலை 4:30 மணியளவில் கம்பளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2025 04:00)