திரு. வேலாத்தை சின்னையா
தோற்றம்: 15 அக்டோபர் 1939 - மறைவு: 27 ஜூலை 2024
யாழ். அச்சுவேலி வளலாய் சல்லியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாத்தை சின்னையா அவர்கள் 27-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்க்கிளி, தங்கவேல் (கிச்சி), யோகேஸ்வரன் (சுதா-உதயன் பணியாளர்), செல்வகுமார் (செல்வா), காலஞ்சென்ற இராசமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சிகிர்தா, கிரிஷா, சர்மி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியா, பிருந்தா, ஷாம்சன், கேசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் வளலாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2024 09:29)
