Mr Velauthapillai Uvarajan

Velauthapillai Uvarajan

Date of Birth: 30 January 1954 - Deceased: 22 November 2024

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும். கொக்குவில் கிழக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை யுவராஜன் அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-வேலாயுதபிள்ளை (பிரதம சிறாப்பர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)-சீதாதேவி தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் அன்புக் கணவரும்,

கவித்திரா (கனடா), கேசவன் (கனடா), அவினாஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வதீசன் (கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

கோடிஸ்வரன் (கனடா) அவர்களின் அன்புப் பேரனும்,

ஜெயந்தி, சாந்தி, லிங்கராஜன் (பிரான்ஸ்), ஆனந்தி (ஜேர்மனி), வேல்ராஜன் (கருணா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லக்ஸ்மன் திசா, ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன் (ஜேர்மனி), சாந்தினி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Wednesday, 27 Nov 2024 5:00 PM - 9:00 PM

Thursday, 28 Nov 2024 8:00 AM - 11:00 AM

Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2024 08:51)