திருமதி. வேலாயுதம்பிள்ளை பாலாமணி

வேலாயுதம்பிள்ளை பாலாமணி

மறைவு: 10 மார்ச் 2025

யாழ். காரைநகர் ஆயிலியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வேலாயுதம்பிள்ளை பாலாமணி அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து - லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி - செல்லாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி (இலங்கை), மகேசன் (அமெரிக்கா), மாதவி (இலங்கை), மாதவன் (பிரான்ஸ்), மயூரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம், முருகேசன், கணபதிப்பிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சிவானந்தன், திருச்செல்வம், பாலமனோகரி, சிவசாந்தினி, அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கஜன், வாசகன், வாசகி, யாதவன், பவித்ரா, குகன், கரிகாலன், நன்மாறன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-032025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Dr, Ottawa, ON K2C 3H2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 10:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2025 04:00)