Mr. Velayutham Ganesan
Date of Birth: 16 April 1945 - Deceased: 13 November 2025
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு, ஜேர்மனி - Wuppertal, கனடா - Toronto, Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் கணேசன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலாயுதம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,
சதாசிவம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ், ரமேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானகலா, துசியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கந்தையா, கிருஸ்ணசாமி, சண்முகம், கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விசுவநாதர், செல்லம்மா, திருப்பதி, செல்லம்மா, கணேசபிள்ளை, புவனேஸ்வரி, பாக்கியம் மற்றும் சண்முகநாதன், பரம்சோதி, மல்லிகாதேவி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவராசா, சவுதாமினி மற்றும் காலம் சென்ற கணேசபிள்ளை, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, செல்லத்துரை மற்றும் சந்திராம்பாள், கோமதி, கைலாசபிள்ளை(துரை), பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
லகுசன், அபிலாஸ், ஓவியா, சோபிகா, நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2025 சனிக்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் பார்வையும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
