திரு. வேலாயுதம் கணேஷன்
(வெள்ளவத்தை சங்கீதா ஜூவலர்ஸ் உரிமையாளர்)
தோற்றம்: 04 ஜனவரி 1956 - மறைவு: 21 ஜூலை 2026
கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு.வேலாயுதம் கணேஷன் அவர்கள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நகை வர்த்தகத்தில் முடிசூடா மன்னனும் கடந்த 50 வருட அனுபவமும் Gem and Jewellery இன் அங்கத்தவரும் INDO-Sri Lanka Association னின் Member உம் Lions Club ல் Ex-President உம் தமிழ் சங்கத்தில் உறுப்பினரும் சமாதான நீதவானும் ஆவார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் - கருப்பாயி தம்பதியினரின் அன்பு ஏக புதல்வரும், விசாலாஷி - பலவாசமுத்து தம்பதியினரின் மருமகனும்,
கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நவநீதனின் (ஜேர்மனி) மச்சானும்,
ரமணி, காலஞ்சென்ற பீட்டர் தம்பதியினரின் சகலையும்,
ரோய் (அமெரிக்கா), கிஷோ (இலண்டன்), கொலின் (இலங்கை), மனோஜ் (இலண்டன்), காலஞ்சென்ற சஷி ஆகியோரின் சித்தப்பாவும்
(பெறா மகளும்) சொனாலி, ஷர்மிளா, டெவிசா ஆகியோரின் மாமனாரும்,
ராகுல், அஷ்வினி, ஆஞ்சல் (இலண்டன்), இனேஷா (அமெரிக்கா), டிரஸ்டன், ஒனேலா (இலண்டன்) ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-07-2026 சனிக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் 32வது ஒழுங்கை, வெள்ளவத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
