Mr. Velayutham Ponnuthurai

Velayutham Ponnuthurai

Deceased: 24 May 2024

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், BeverwijkHolland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதம் பொன்னுத்துரை அவர்கள் 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா-இராசம்மா தம்பதியினரின் (புளியங்கூடல்) மருமகனும்,

பத்மாவதி (ரெத்தினம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

கமலலெட்சுமி, கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேல்விழி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மகுலநாதன், விஜயபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலக்கியா, காயத்ரி, ராகுல், வசீகரன், கீதன், மஞ்சரி, சுதர்சன், ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற துரைராஜா, காந்திமதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, பழனியப்பா மற்றும் தவமணி, கருணாவதி, இந்திராவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், வரதலெட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம், மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தாரா, டிலன், கியன், லோகன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். 

அன்னாரின் புகழுடல் 27-05-2024 திங்கட்கிழமை மற்றும் 28-05-2024 செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை CAssociatie & IJmond DELA Heemskerk | uitvaartcentrum Laan van Assumburg 95-A, 1962 TL Heemskerk, Netherlands எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 29-05-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை IWesterveld Duin- en Kruidbergerweg 2- 6, 1985 HG Driehuis, Netherlands எனும் முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/05/2024 04:00)