Mr. Velayutham Siyamasundram
Deceased: 12 August 2026
நுவரெலியாவைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலாயுதம் சியாமசுந்தரம் அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தாா்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் - அன்னக்கொடி (நுவரெலியா) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரேசன் (ரம்புக்பிட்டிய) - புவனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
ஜயந்தி (ஓய்வுபெற்ற உப அதிபர் - நாவலப்பிட்டி-கதிரேசன் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
வத்ஸலா ரவிகுலசந்திரன், மாதவன் (நியூஸர்லாந்து), Dr.உமாசந்திரன் (இலண்டன்), உமாதேவி, சந்திரபோஸ், ஜெயசுந்தரம், Dr.முரளிதரன் (இலண்டன்) ஆகியோரது அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கங்காதரன் (ராஜன்), பகிதரன் (ரமணன்), சிவாந்தி, துஸ்யந்தி ஆகியோரது அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-08-2026 வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் இல- 36/8A. பெனிதுடுமுல்ல, நாவலப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் பவ்வாகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
