திரு. வேலாயுதம் விமலராஜா

(ஓய்வுபெற்ற தொழில் நீதிமன்ற நீதிபதி, சட்டத்தரணி, கைத்தொழில் நீதிமன்ற நடுவர், கைத்தொழில் சட்ட நிறுவனத்தின் செயலாளர் நாயகம்)

வேலாயுதம் விமலராஜா

மறைவு: 12 மே 2025

யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிருலப்பனை- கொழும்பு - 05, சிட்னி - அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசித்தவருமான திரு. வேலாயுதம் விமலராஜா அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஏ.ஆர். சுப்பிரமணியம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசராஜா (இலங்கை), விஸ்வேஸ்வராஜா (நியூசிலாந்து), நிர்மலராஜா (ஜேர்மனி), பாக்கியம் மகாலிங்கம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபேந்திரா (சட்டத்தரணி - இலங்கை, அவுஸ்திரேலியா), புவேந்திரா, காலஞ்சென்ற விமலினி, பத்மரஜீந்திரா (இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரோஹினி, பவானி, நந்தகுமார் (பிறிஸ்பேன்), புண்ணியசீலி ஜினதாச (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், சுபேதா (ஹரி), லக்மி ரோஜிதா (கமெரூன்), நந்திகா (பிறிஸ்பேன்), விமன்யா, வினால், லக்கித் ஆகியோரின் பேரனும்,

கண்ணாவின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று சிட்னியில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2025 04:00)