திரு. வேலாயுதபிள்ளை பாலசுப்பிரமணியம்
மறைவு: 06 மார்ச் 2025
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலாயுதபிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கதிர்காமநாதன், இராசபூபதி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற முருகதாஸ், மோகனதாஸ் (கனடா), கண்ணதாசன் (நோர்வே), ஹேமமாலினி (இலண்டன்), ஜீவதாசன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லீலாதேவி (ஜேர்மன்), ஜெகதீஸ்வரி (நோர்வே), பரமேஸ்வரன் (இலண்டன்), சுதர்ஜினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீப், தயானந்தன், சாமிலா - பகீரதன், கௌசிகா, அபிலாஸ், ஆர்த்திக், ஹம்சிகா - மதுசன், நிரோஜன் - சிந்துஜா, சுருதிகா, தருஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சமீரா, அனிரா, அமாஜன், பிரித்வின், பிரவின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2025 ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
மணியர்பதி வீதி,
கொக்குவில் மேற்கு, கொக்குவில்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
