திரு. வேல்முருகு கனகசபாபதி

(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்)

வேல்முருகு கனகசபாபதி

தோற்றம்: 19 ஜனவரி 1939 - மறைவு: 30 ஏப்ரல் 2024

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, அரசடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேல்முருகு கனகசபாபதி அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிராமகோட்டு நீதிபதி சங்கரப்பிள்ளை வேல்முருகு - சீதாதேவி தம்பதியினரின் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான நுளம்பியல் நிபுணர் இராமசாமி மகாதேவா - பாலாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,

திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

நரேந்திரன் (பொறியியலாளர்-லண்டன்), கௌரி (கனடா), தர்ஷினி (சட்டத்தரணி - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சறோஜினி (வைத்தியர்-லண்டன்), சிவகுமார் (கனடா), ஸ்ரீகணேசராஜா (சட்டத்தரணி-கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்,

அபி (லண்டன்), செயூரன் (கனடா), சேயோன் (கனடா), செந்தாழன் (கனடா), சாருகேஷன் (கொழும்பு), சாம்பவி (கொழும்பு) ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம், மனோன்மணி, இந்திரா ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற பகவதி மற்றும் விஜியறாணி (சட்டத்தரணி - பதில் நீதவான்), கலைமதி (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோரியடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2024 04:00)