திரு. வேலு பாலகிருஷ்ணன்

(கிருஷ்ணா ஜூவலர்ஸ் உரிமையாளர் - நீர்கொழும்பு)

வேலு பாலகிருஷ்ணன்

தோற்றம்: 18 ஜூன் 1953 - மறைவு: 07 ஏப்ரல் 2026

கேகாலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.வேலு பாலகிருஷ்ணன் அவர்கள் 07-04-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலு - காளியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்பு கணவரும்,

வினோதன், பவதாரணி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லட்சுமி, காலஞ்சென்ற செல்வராஜ், சிவநாதன், ராமசந்திரன், இந்திராணி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

பாலசுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராஜா, முருகபூபதி, காலஞ்சென்ற ரெங்கசாமி, யோகசாந்தி, சகுந்தலாதேவி, தயாளினி, ராஜரட்ணம், கணேஷன் ஆகியோரின் மைத்துனரும்,

மிதுஷா, சதிஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரோன், ஆதிரா, ஆராத்யா, மிர்திகாஸ்ரீ ஆகியோரின் அன்புத்தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-04-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இல- 185, சுமித்துரு மாவத்தை, தலுபத்தை, நீர்கொழும்பில் அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2026 00:00)