Mr. Velum Mayilum Gnanasundaram

(உரிமையாளர்- Ladies Mart புடவை ஸ்தாபனம், திருகோணமலை)

Velum Mayilum Gnanasundaram

Date of Birth: 03 January 1957 - Deceased: 27 April 2025

யாழ். வல்வெட்டித்துறை வாவினி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும் மயிலும் ஞானசுந்தரம் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் (பெயிண்டர்) - சூரியரெத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகனும், செல்லத்துரை (தபால் அதிபர்) - பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

சத்தியவேணி (வேணி) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷா, சங்கீர்த்தன் ஆகியோரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டிருஷாந்தின் பாசமிகு மாமனாரும்,

மதுஷராவின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் (பெயிண்டர்), இந்திராரெத்தினம் (இந்திரா - வவுனியா), நவரத்தினம் (வண்ணம் - வல்வெட்டித்துறை), பாக்கியரத்தினம் (கிளி - ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சித்திரலேகா (வல்வெட்டித்துறை), தம்பிபிள்ளை (விசுவமடு), காலஞ்சென்ற கிருபாமூர்த்தி, யோகேந்திரன் (ஜேர்மனி), சத்தியலிங்கம் (இலண்டன்), கமலவேணி (இலண்டன்), பத்மவேணி (பருத்தித்துறை), ரஞ்சிதவேணி (பருத்தித்துறை) ஆகியோரின் மைத்துனரும்,

தர்மேஸ்வரி (இலண்டன்), பிறேம்குமார் (குட்டி - இலண்டன்), சிவதாஸ் (கப்பல் ஐயா - பருத்தித்துறை), ஜெயகுமார் (பருத்தித்துறை) ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற யோகராசா பத்திநாதன் - பிலோமினா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் (இல-90, இராஜவரோதயம் வீதி, திருகோணமலை) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2025 04:00)