Mr. Velummayilum Surenthirarasa
Date of Birth: 13 August 1960 - Deceased: 17 August 2025
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலும்மயிலும் சுரேந்திரராசா அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் - தெய்வரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி (வைத்தியர்), கிருஷாந் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
திவாகர், மயூரிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷயன், ஆருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ருக்குமணிதேவி, மகேந்திரராஜா, தவமணிதேவி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2025 புதன்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது ஆத்தியடி பருத்தித்துறை இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
