திரு. வேலுப்பிள்ளை கதிரவேலு
(முன்னாள் இ.போ.ச நடத்துனர்)
தோற்றம்: 14 மார்ச் 1940 - மறைவு: 04 நவம்பர் 2024
யாழ். இமையாணன் உடுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், தம்பலை அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
முருகேசு-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலநாயகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அப்பாச்சாமி, மகேஸ்வரி, பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பிரபாகரன் நிலானி (சுவிஸ்), யோகரத்தினம் ரஜனி, இதயராஜன் சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தை மற்றும் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தம்பாலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
