திரு. வேலுப்பிள்ளை யோகேஸ்வரன்

(சிற்ப சிரோன்மணி, சிற்ப கலாவாருதி)

வேலுப்பிள்ளை யோகேஸ்வரன்

தோற்றம்: 10 ஜூன் 1950 - மறைவு: 08 செப்டம்பர் 2025

யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சாரங்கன், கேமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீமா, கிருஷாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரி, அரியரத்தினம், செல்வரத்தினம், பாலச்சந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

திவ்வியேஷ், கதிரவ், சஞ்சிவ், நிவேதிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூனாவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2025 04:00)