திருமதி. வேலுப்பிள்ளை அருட்சோதி
மறைவு: 05 டிசம்பர் 2025
யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், இல- 355, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை அருட்சோதி அவர்கள் 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான நாவலப்பிட்டி மயில்வாகனம் - கனகம்மா தம்பதியினரின் மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, சிவசோதி, ஞானசோதி, இரத்தினசோதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, சரஸ்வதி மற்றும் தனலட்சுமி, திலகவதி, இந்திராணி, பத்மராணி, இரத்தினசிங்கம், இரத்தினராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2025 சனிக்கிழமை காலை முதல் வைற் கௌஸ், மெயின் வீதி, யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
