Mr. Veluppillai Kandasamy

(Retired Storekeeper M P C S, Atchuvely)

Veluppillai Kandasamy

Deceased: 25 July 2024

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும்   கொண்ட  திரு. வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 25-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதியினரின்  அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா-கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியத்தின் பாசமிகு கணவரும்,

லோகநாயகி, லோசனா (சுவிஸ்), கிரிவேல் (பொது முகாமையாளர்- ப. நோ. கூ. ச. அச்சுவேலி), சோதிவேல் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

குஞ்சிதபாதம், ஆறுமுகவேல் (சுவிஸ்), சிவசுதனி (ஆசிரியர்- யா/கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை), கோமகள் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனரும்,

நரேனின் பெரியதந்தையும்,

லக்‌ஷாயினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்), பங்கஜன் (ஆசிரியர்- யா/நெடுந்தீவு மகா வித்தியாலயம்), அபிஷான் (சுவிஸ்), அபினாஷ் (சுவிஸ்), பிரகாஷ் (சுவிஸ்), சாகித்தியன் (யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி), ஆருத்தியன் (யா/கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை), சாருக்தியன் (யா/கைதடி நுணாவில் அ. த. க. பாடசாலை), லக்‌ஷிமிகா (கனடா), தாமிரன் (கனடா), கௌசிகன்  (அபிவிருத்தி உத்தியோகத்தர்- கண்டாவளை பிரதேச செயலகம்), சஞ்சிகா (வ/பெரியகுளம் அ. த. க. பாடசாலை) ஆகியோரின் பேரனும்,

தன்விகாவின் பூட்டனும்,

வள்ளியம்மை, முருகையா, தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற அருணாசலம், சாரதாதேவி (கனடா), காலஞ்சென்ற சிவனடியான் ஆகியோரின் மைத்துனரும்,

பாலசுப்பிரமணியம் (லண்டன்), குணசீலன் (சுவிஸ்), சத்தியாதேவி (கனடா), கலாதேவி ஆகியோரின் மாமனாரும்,

செந்தில்கிரி (லண்டன்), ரமணாகிரி (லண்டன்), கோமுகி (கனடா) ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் காலை 8.00 மணியளவில் நடைபெற்று,  முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2024 09:29)