திரு. வேலுப்பிள்ளை கதிரவேலு (பரந்தன் சித்தியர்)

(முன்னாள் உரிமையாளர் - சித்தி விநாயகர் ஸ்டோர்ஸ், பரந்தன்)

வேலுப்பிள்ளை கதிரவேலு (பரந்தன் சித்தியர்)

தோற்றம்: 15 மே 1938 - மறைவு: 18 ஆகஸ்ட் 2026

யாழ். காரைநகர், நட்டுப்பாளியைப் பிறப்பிடமாகவும், ஆயிலி, பரந்தன் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (செட்டியார்) - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் - திரவியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கார்த்திகேயனி (வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

 Dr. சுதாகரன் (சத்யா), சுமதி (இலங்கை), சுபாஸ்கரன் BEng (Hons-இலண்டன்), சுபோதினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவிகா (ஷைலா-கனடா), காலஞ்சென்ற E.S.P. கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அச்சுதன் (கனடா), உமாசுதன் (சச்சின்-கனடா), சங்கவி (கனடா), Dr. அபிராமி, செந்தூரன், வைஷிகா, ஆகாஷ் (இலண்டன்), ஆர்த்தி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகசபை, தங்கம்மா மற்றும் பாலாமணி, கனகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, வைத்திலிங்கம், நவரத்தினம் மற்றும் இராஜலட்சுமி, ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்றவர்களான இராசமணி, சபாநாதன் மற்றும் சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-08-2026 புதன்கிழமை முதல் இல- 11, பெதெஸ்டா வீதி, கொழும்பு-05 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-08-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சுபாஸ்கரன்:- +44 747 991 4968
செந்தூரன்:- +94 77 687 8187

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2026 00:00)