Mr. Veluppillai Kumaraswamy

(ஓய்வு நிலை கணக்காளர் - பிரதேச செயலகம், காரைநகர்)

Veluppillai Kumaraswamy

Deceased: 08 January 2025

யாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற ஆலடி முகாந்திரம் வைத்திலிங்கம் தம்பதியினரின் மருமகனும்,

சிவபூரணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விசாகன் (பொறியியலாளர்), சேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாலாவின் அன்பு மாமனாரும்,

ஆதிரையின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சண்முகரத்தினம் (விரிவுரையாளர்), சிவகுருநாதன் (வர்த்தகர்), முருகமூர்த்தி (ஓய்வு நிலை அதிபர் - யாழ்ற்றன் கல்லூரி), சொர்னாம்பிகை (ஓய்வு நிலை பொது முகாமையாளர் - ப.நோ.கூ.சங்கம் காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுமார், சிவகலை, சிவயோகன், சிவதேவி  மற்றும் சிவமணி, சிவபாலன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் சடையாளியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2025 05:00)