திரு. வேலுப்பிள்ளை மகாதேவன்
மறைவு: 03 ஜூலை 2025
யாழ். சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், அராலி மேற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை மகாதேவன் அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா - நன்னிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மதனகுமார் (இலண்டன்), யதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரவதனாவின் அன்பு மாமனாரும்,
ஆதித்தன் (சிங்கப்பூர்), அபிராஜ் (ஊவா வெல்லச பல்கலைக்கழகம் - பதுளை), அஸ்வினா (மாணவி-யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணேசமூர்த்தி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அராலி மேற்கு கொத்தத்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
