Mr. Veluppillai Mahadevan

Veluppillai Mahadevan

Deceased: 03 July 2025

யாழ். சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், அராலி மேற்கு வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை மகாதேவன் அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா - நன்னிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நல்லம்மா அவர்களின்  அன்புக் கணவரும்,

மதனகுமார் (இலண்டன்), யதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரவதனாவின் அன்பு மாமனாரும்,

ஆதித்தன் (சிங்கப்பூர்), அபிராஜ் (ஊவா வெல்லச பல்கலைக்கழகம் - பதுளை), அஸ்வினா (மாணவி-யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணேசமூர்த்தி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அராலி மேற்கு கொத்தத்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2025 04:00)