Mr. Veluppillai Nadarasa

Veluppillai Nadarasa

Deceased: 16 December 2025

யாழ். காரைநகர் சத்திரந்தை களபூமியைப்  பிறப்பிடமாகவும், மில் வீதி இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கல்லூரி வீதி நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை நடராசா அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை - பூரணம் தம்பதியினனின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தேவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதன், அன்னம்மா, மகேஷ்வரி மற்றும் தர்மகுலசிங்கம், தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன் (அதிபர் - யாழ். அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயம், கணித ஆசான் றோயல் அக்கடமி, சோதிநாதன் (மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், 

சசிகலா, புஷ்பராணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ,

லக்சிகா (யாழ் மருத்துவப்பீடம், தர்சிகா, சாம்பவி, பவனிகா, யதுர்சன், மதுஷன், விராஹன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல்  கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2025 00:00)