Mr. Veluppillai Perinbanayagam
Date of Birth: 24 July 1964 - Deceased: 19 October 2025
யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இல- 72/33, பணிக்கர் ஒழுங்கை, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை பேரின்பநாயகம் அவர்கள் 24-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்ற பரமநாதன் - பத்மாதேவி தம்பதியினரின் மருமகனும்,
சிவஅம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசங்கர், கஜமுகன் ஆகியோரின் தந்தையும்,
தனபாலசுந்தரம், மோகனாம்பிகை, லோகநாதன், குமாரலிங்கம், ராஜேஸ்வரி, சண்முகநாதன் ஆகியோரின் சகோதரனும்,
சிவபாதசுந்தரம், சிவசோதி, சரோஜனிதேவி, தவமலர், ராசலட்சுமி, காலஞ்சென்ற தவநிதி, கேதீஸ்வரி, விக்னேஸ்வரன், சிவகௌரி, சிவகங்கா, பவானி ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயமலர், காலஞ்சென்ற யோகேஸ்வரன், ஆனந்தராசா, யோகதேவன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
