Mr. Veluppillai Sachchithananthrasa

(ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர்)

Veluppillai Sachchithananthrasa

Date of Birth: 26 March 1949 - Deceased: 01 September 2024

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சச்சிதானந்தராசா அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தயானந்தி (ஆனந்தி-ஆசிரியை யா/மயிலணி சைவ மகா வித்தியாலயம்), பிரசாத் (இலங்கை மின்சார சபை-சுன்னாகம்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

சுகந்தன் (ஆசிரியர்-யா/ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயம்), நிஷாந்தினி ஆகியோரின் மாமனாரும்,

டர்வின், ஷர்வின், ஜதுசிகா, ஜஸ்விகா ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் உடன்பிறவா சகோதரனும்,

விவேகானந்தராசா (பிரித்தானியா), சிவானந்தராசா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

இல-18, கந்தையா வீதி,

சுன்னாகம் கிழக்கு, சுன்னாகம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2024 04:00)