திரு. வேலுப்பிள்ளை சிவபாதம்

வேலுப்பிள்ளை சிவபாதம்

மறைவு: 30 டிசம்பர் 2025

முல்லைத்தீவு - வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் மூத்த புதல்வனும்,

காலஞ்சென்ற அருளம்பலம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பராசக்தி (புதுக்குடியிருப்பு), கணேசரூபன் (பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் பூசகர்), குகநேசன் (புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர், சமாதான நீதவான் - கோவில்புரம்), கம்சாநந்தினி (வட்டுவாகல் மாவட்ட வைத்தியசாலை, முல்லைத்தீவு), கோமதி (முன்பள்ளி ஆசிரியை - புதுக்குடியிருப்பு), காலஞ்சென்ற துட்சணன், வேயிணி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

தேவநாயகம் (புதுக்குடியிருப்பு), சிவசுப்பிரமணியம் (குட்டி - இலண்டன்), நீதன், பிரபாலினி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பகீரதன், யாழினி (இலண்டன்), தனுராஜ் (இலண்டன்), கிருசிகா (இலண்டன்), ஜிந்துசன், கோவித், வர்ஜிகா, யதுசிகா, தசாந்தன், பவிஷாலினி, பகழவன், லோஜன், பவநிதி, டினாசிகா, நிகிதா, டிசான், ஜெனகன் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

புஸ்பவதி, நல்லம்மா (வட்டுவாகல்), தங்கராசா, சரோஜினிதேவி, சூரியகுமாரி (புதுக்குடியிருப்பு),கஜேந்திரராசா (இலண்டன்), இந்திராணி (இலண்டன்), ரஞ்சிதா (இலண்டன்), நாகபூசணி (இலண்டன்), மகேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம், வேலாயுதம் (வட்டுவாகல்), நவரட்ணம் (இலண்டன்), ராஜேஸ்வரன் (இலண்டன்), விக்னேஸ்வரன் (இலண்டன்), குகன் (இலண்டன்), செந்தில்குமார் (புதுக்குடியிருப்பு) ஆகியோரின் மைத்துனரும்,

மனோகரராசா (இலண்டன்), மஞ்சுளாதேவி (புதுக்குடியிருப்பு), மனோரஞ்சிதம் (சுவிஸ்), மனோகரி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2025 புதன்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 9.30 மணியளவில் திருவுடல் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2025 00:00)