Mr. Veluppillai Sivasithambaram Sivalingham

(பிரபல வர்த்தகர் - நுவரெலியா சிவா Enterprise, Siva Complex)

Veluppillai Sivasithambaram Sivalingham

Deceased: 19 March 2026

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகக் கொண்ட திரு. வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் சிவலிங்கம் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகர் தங்கோடை காலஞ்சென்ற ஆசிரியர். வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் - ராசம்மா தம்பதியினரின் மகனும்,  சின்னாலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

முன்னாள் பசறை, நுவரேலியாவின் பிரபல வர்த்தகரும், காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற  மீனாட்சியின் அன்புப்  பெறாமகனும்,

சிவரூபன், சிவரஞ்சன், சிவகாந்தன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

சிவரஞ்ஷனி, டிசானி, பின்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவானுஜன், ரொஷ்னி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

சிவமணி, சிவகலை ஆகியோரின்  அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற இந்திராணி, செல்வராணி, தியாகலிங்கம், கணேசலிங்கம், சுந்தரலிங்கம், ஜெயராணி, நந்தகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2026 00:00)