Mr. Veluppillai Thevarajah

Veluppillai Thevarajah

Date of Birth: 21 November 1938 - Deceased: 05 June 2025

யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வேலுப்பிள்ளை தேவராஜா அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,

சகுந்தலாதேவி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செங்கதிர், வசந்தகுமாரி, மதியழகன், பிரபாகரன், சந்திரகுமாரி, குபேந்திரன், இரவீந்திரன், ஜெயவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுமதி, செந்தில்குமரன், தனுஜா, தர்சினி, விக்கினேஸ்வரன், வினோதினி, மைதிலி, ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவமணிதேவி, குலசிங்கம், குலவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாதனா, சுருதிகா, சஷாங்கி, சாமுகி, சாத்விகன், சஷ்வின், விதுஜன், மதுசாகி, ஆத்மீகன், ஆரத்யா, அவிரா, அஸ்வின், அக்‌ஷயன், ஆர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-06-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, மதியம் 01:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2025 04:00)