திருமதி வேலுப்பிள்ளை வாலைபிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியை)
மறைவு: 26 மே 2020
உசனைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி, மொன்றியல் கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வேலுப்பிள்ளை வாலைபிள்ளை ரீச்சர் (நல்லம்மா) அவர்கள் 26-05-2020 அன்று இறைப்பாதம் அடைந்தார்.
(இளைப்பாறிய ஆசிரியை சாவகச்சேரி இந்துக்கல்லூரி, நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாசாலை, கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலயம், கேகாலை சென்மேரீஸ் கல்லூரி,
அனுராதபுரம் விவேகானந்தா மகாவித்தியாலயம் ).
அன்னார் காலம் சென்றவர்களான வாரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னத்தம்பி (மலையார்), முத்துப்பிள்ளை தம்பிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை (ஐயாத்துரை) - தலைமை ஆசிரியர் கேகாலை - அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகிரன், உதயகுமாரி, இன்பகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவகலா, தயாபரன், துசியந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகிலா, அர்ச்சனா, தாட்ஷாயினி, பிரம்மன், பாவனா, அபிமன், அர்ஜுன், ஆகியோரின் பாசமிகு பேத்தியும்
காலம் சென்றவர்களான பொன்னையா, நாகமுத்து, அன்னபூரணம், சின்னத்துரை ஆகியோரின் அன்புச்சகோதரியும்
செல்லாச்சி, நாராயணபிள்ளை, சங்கரப்பிள்ளை, கண்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 30-05-2020 சனிக்கிழமை மொன்றியலில் காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பி.ப 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
AETERNA FUNERAL COMPLEX
55, Gince Street
Montreal
(St-Laurent)
Quebec, Canada H4N1J7
தொடர்புகளுக்கு:-
கிருபா : Video-Maruty Toronto +1-416-751-2060
இன்பன் : Video-Maruty Montreal +1-514-264-4444
உதயா : +1-647-554-0133
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2020 09:05)
