Mrs. Velusamy Nageshwary

Velusamy Nageshwary

Date of Birth: 17 November 1954 - Deceased: 24 July 2026

மஸ்கெலியா சிவா ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு.பி.வேலுசாமி அவர்களின் பாசமிகு மனைவி திருமதி. நாகேஸ்வரி அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு.பி. வேலுசாமி அவர்களின் பாசமிகு பாரியாரும்,

பிரமிளா, சரண்யா, தர்ஷிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷாந்தன், மனோஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாக்ஷி, அஷ்வி ஆகியோரின் அம்மம்மாவும்

காலஞ்சென்ற சுந்தர்ராஜ், உதயகுமார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பவானி, உமா ஆகியோரின் சகோதரியும்,

சிவசாமி, செல்லம்மா, வள்ளியம்மா ஆகியோரின் மைத்துனியும்,

சுஜி, மனோஜ், சசிதரன் ஆகியோரின் அத்தையும்,

சபித்குமாரின் சித்தியும்,

சண்முகசுந்தரம், லலித்தா, பரமேஸ்வரி, மூர்த்தி, காலஞ்சென்ற ரெங்கசாமி ஆகியோரின் உறவினரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-07-2026 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் அன்னாரின் இல்லத்தில் (சிவா ஸ்டோர்ஸ் 128, தபாற் கந்தோர் வீதி, மஸ்கெலியா) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பல் 10.30 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் கொட்டகலை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 52 227 7209
+94 77 788 6833

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2026 00:00)