திரு வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்

(முன்னாள் ஆசிரியர் , இளைப்பாறிய பிரதமலிகிதர் மாநகரசபை யாழ்ப்பாணம் ))

வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம்

மறைவு: 12 மே 2020

மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தியார் நடராசா சோமசுந்தரம் (முன்னாள் ஆசிரியர் , இளைப்பாறிய பிரதமலிகிதர் மாநகரசபை யாழ்ப்பாணம் ) அவர்கள்  12/ 5 /  2020  செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான ஆசிரியரும் ஆயுர்வேதவைத்தியருமானநடராசா,வள்ளியம்மை தம்பதிகளின் புதல்வரும்,
 
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் ( முன்னாள் சாவகச்சேரி இந்துக் கல்லூரிஆசிரியர்  )  அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற தில்லை நடேசபிள்ளை அன்னம்மாவின் மருமகனும்,
 
காலஞ்சென்றவர்களான பரமானந்தம் குலசேகரம் வைத்தியநாதனின் அருமைச்சகோதரும், 

ஸ்ரீமுருகன், ஸ்ரீகாந்தன், வேலும் மயிலும், சாந்தினி, ஸ்ரீகதிர்காமநாதன், நளாயினி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
 
பரமேஸ்வரி, கலாநிதி,  இராஐநந்தினி, ஸ்ரீகணேசன், ரஞ்சனி, ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரகாஷ், தர்சினி, ஷெமிலா, பிரமிளா, ஷர்மிலா, ஸ்ரீகரன், றஜிகலா, செந்தூரன், சிந்துஜா, நர்மதன், மிதுன், துளசி, அபிரா, காயத்திரி,  கிருஷாந், அனோஜ், ஆகியோரின் பேரனும்,
 
ஹரிஷ்மன், அஜிஷ்மன், ஹரிஷ், ஸ்ரீராம், சாதனா,சரவணன், தூரிகன், கவிநிலா, அருவிகன், அரன், நிரான், கார்த்திக், அர்ஜ்யுன்,  நயனி, ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை

(Chapel Ridge Funeral Home  8911- Woodbine  Ave. Markham ON  ) 

பி. ப  2.00 தொடக்கம் 4.00 நடைபெற்று தகனக் கிரியை 4.30க்கு நடைபெறும்.   
 
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இக்காலச் சூழ்நிலை கருதி குடும்ப அங்கத்தவர்கள் மட்டும் பங்குபற்றுவர் .

தகவல்:

ஸ்ரீமுருகன்  : 01194 77 748 1938

ஸ்ரீகாந்தன் : 01194 77 979 5478

வேலும்மயிலும் : 803  747   2443

சாந்தினி : 01161418267752

ஸ்ரீகதிர்காமநாதன் :  416  903   3574

நளாயினி:  416  856 0062

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2020 05:18)