திரு. வீரகத்தி பாஸ்கரமூர்த்தி
மறைவு: 06 ஜூலை 2025
யாழ். கரவெட்டி மேற்கு மத்தொணியை பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வீரகத்தி பாஸ்கரமூர்த்தி அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், வீரகத்தி (முன்னாள் தபால் ஊழியர் மற்றும் கரவை வெல்லன் விநாயகர் கணக்காளர்) - லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பிரேமா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் உமா, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
