திரு. வெற்றிவேலு சுப்பிரமணியம் (சிவம் ஐயா)
தோற்றம்: 20 மார்ச் 1951 - மறைவு: 22 மார்ச் 2025
யாழ். வரணி கரம்பைக்குறிச்சி மேற்கு குருக்கள் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வெற்றிவேலு சுப்பிரமணியம் அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இரத்தினம்மா, மகாலிங்கசிவம், தில்லையம்பலக் குருக்கள் (மிருசுவில் மன்னன்குறிச்சி கந்தசாமி ஆலய பிரதம குரு) ஆகியோரின் சகோதரனும்,
கருணாகரன் (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - சாவகச்சேரி), காலஞ்சென்ற கருணாநிதி, பாஸ்கரன் (ஆசிரியர் - வவுனியா கல்லாறு ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம்), ஸ்ரீதரன் (பதிவாளர் - நீதிவான் நீதிமன்றம், பருத்தித்துறை), கார்த்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - கமநலசேவைகள் திணைக்களம், சாவகச்சேரி), சரணியா (அபிவிருத்தி உத்தியோகத்தர் - தொழில் பயிற்சி நிலையம், கிளிநொச்சி), பாலகரன் (உரிமையாளர் - ஸ்ரீ கருணா மல்டி சொப், வரணி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுஷா, ரூபா (கனடா), கவிதா (ஆசிரியை - வவுனியா நெழுங்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்), அபிராமி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், சாவகச்சேரி), திருமாறன் (உரிமையாளர் - ஸ்ரீ கருணா மல்டி சொப், வரணி), நிரஞ்சன் (கிராம உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீலகண்ட குருக்கள் லலிதாம்பிகை, தவறஞ்சினி, காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, நாகேஸ்வரி, வைரவநாதன் மற்றும் செவ்வந்திநாதன் (பிரான்ஸ்), சிவசெந்திநாதன் (பிரதம கணக்காளர் - திறைசேரி கிழக்கு மாகாணம்) ஆகியோரின் மைத்துனரும்,
நந்தகோகுலன், அகல்யா, ஹிருணிகா, அஸ்விகா, விஹானா, அஹர்வின், தஸ்விகா, டிருஸன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் தறளப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
