திரு. விக்னேஸ்வரன் சகின்ராஜ்
தோற்றம்: 28 நவம்பர் 1978 - மறைவு: 04 செப்டம்பர் 2024
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விக்னேஸ்வரன் சகின்ராஜ் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விக்னேஸ்வரன்-சேயன்பு தம்பதியினரின் அன்பு மகனும்,
விநாயககோஸ்டி-வசந்தி தம்பதியினரின் அருமை மருமகனும்,
விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சினேகா, சுகர்னா, லக்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சகிலா, ஸ்கந்தறாஜ் (கோபி), ஸ்கந்தராணி, காலஞ்சென்ற தட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசிங்கம், நிர்மலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபன், ஜெயறூபன் ஆகியோரின் மச்சானும்,
நிருஷா, சுப்பிரியா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிருஷாந், இஷானி, ஆதவன், ஆதிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஸ்னவி அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00–9:00 மணி வரையும், 09-09-2024 திங்கட்கிழமை முற்பகல் 10:30–11:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:30–1:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
