Mrs. Vijayalakshmi Murugesampillai

Vijayalakshmi Murugesampillai

Date of Birth: 06 November 1962 - Deceased: 09 November 2024

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலக்சுமி முருகேசம்பிள்ளை அவர்கள் 09-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு-நேசரட்ணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

முருகேசம்பிள்ளை (சிறி) அவர்களின் அன்பு மனைவியும்,

திவ்வியா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ராஜலக்சுமி, ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், அதிஷ்டலக்சுமி, பரமேஸ்வரன், ராஜேஸ்வரன், விமலேஸ்வரன், தனலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாணிக்கவாசகர் (இலண்டன்), மல்லிகா பத்மநாதன் (கனடா), மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 18-11-2024 திங்கட்கிழமை அன்று காலை 7:30 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2024 05:00)