திருமதி. விஜயலட்சுமி குணரத்தினம்
மறைவு: 08 செப்டம்பர் 2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி குணரத்தினம் அவர்கள் 08-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
குணரத்தினம் (முன்னாள் ப. நோ.கூ.சங்க முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லீலானந்தன் (பிரித்தானியா), தயானந்தன் (பிரித்தானியா), சுகிர்தா (ஆசிரியை - யாழ். ஸ்ரீசோமாஸ்கந்த இந்து ஆரம்ப பாடசாலை), சிவேதன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலைவாணி, சுமித்தா, வசந்தரூபன் (அதிபர் - யாழ். பொன்.பரமானந்தர் ம.வி), பிருந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பூஜிதா, ஜானுயா, தியா, சஸ்சியா, தனிஸ், கருணிகா, கவினுகா, அனாமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சிறுப்பிட்டி மேற்கில் உள்ள பத்தகலட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
வையிரவர் கோவிலடி, சிறுப்பிட்டி வடக்கு,
நீர்வேலி, யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
