Mrs. Vijayalatchumi Sinnathambi

Vijayalatchumi Sinnathambi

Date of Birth: 21 August 1945 - Deceased: 05 January 2025

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, பிரான்ஸ் Torcy  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பராசக்தி தம்பதியினரின் அன்பு மகளும்,

சின்னையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரி (சுவிஸ்), சிவசங்கர் (பிரான்ஸ்), சிவதரன் (இலண்டன்), சிவதர்சினி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ஆனந்தராசா, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கோபாலபிள்ளை, பரமேஸ்வரி (தங்கமணி), காலஞ்சென்ற தெய்வானை (செல்லம்) ஆகியோரின் மைத்துனியும்,

மருமக்களின் அன்பு மாமியாரும், பெறாமக்களின் அன்பு மம்மியும், பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 9:00 - 11:00 மணி வரை Pompes funebres PFG LAGNY - SUR - MARNE (96 Rue Saint - Denis, 77400 Lagny - sur - Marne, France) என்னும் இடத்தில் நடைபெற்று, நண்பகல் 1:15 மணியளவில் புகழுடல் Crematorium des joncherolles villetaneuse (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2025 05:00)