திருமதி. விஜயலெட்சுமி சுப்பிரமணியம்
தோற்றம்: 12 செப்டம்பர் 1948 - மறைவு: 02 அக்டோபர் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம், அபினிமங்கலம் கிராமம், குனக்கத்துடையான் கோத்திரம் திருமதி. விஜயலெட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் பிள்ளை -செல்லம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பிள்ளை - செல்லாயி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா (கொழும்பு), பிரியதர்ஷினி (கண்டி), சிவரஞ்சனி (கண்டி), பார்த்தீபன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஸ்வநாதன் (விக்னேஷா-கொழும்பு), கனகராஜ் (Sooriya Electrical Centre-கண்டி), முருகதாஸ் (Selvams-கண்டி), காயத்ரி (இலண்டன்) ஆகியோரின் மாமியாரும்,
டனுஷ்கர், சாஹித்யா, ஹரிணி, அருந்ததி, கேஷிகா, மாதவ் முகுந்தன், பிரனேஷ், சுதேஷ் ஆகியோரின் அன்பு அம்மாயியும்,
அபிமன்யு, மஹா லக்ஷ்மி, சாய் லக்ஷனா ஆகியோரின் அன்பு அப்பாயியும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி சுப்பிரமணியம் பிள்ளை (கலஹா), திரு திருமதி முருகேசு பிள்ளை (மொரகொல்ல), காலஞ்சென்ற திரு சண்முகம் பிள்ளை நலமுடன் திருமதி சரஸ்வதி மற்றும் காலஞ்சென்றவர்களான திரு திருமதி நாராயணசாமி ஆகியோரின் சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான காமாட்சி (இந்தியா), தனபாக்கியம் (கண்டி), தங்கவேலு( கண்டி) மற்றும் நலமுடன் அன்னக்கிளி (நீர்கொழும்பு), லெட்சுமி அம்மாள் (வத்தளை) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-10-2026 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Mahaiyawa Sanilta Vip Parlour Kandy இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைப்பெற்று, திருவுடல் மஹய்யாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கனகராஜ்:- +94 77 119 1978
முருகதாஸ்:- +94 77 741 3327
www.tamilthakaval.org
