Mrs. Vijayalatcumy Rajendran Naiyudu

Vijayalatcumy Rajendran Naiyudu

Date of Birth: 04 February 1959 - Deceased: 01 September 2025

கினிகத்தனை டிரேடர்ஸ் உரிமையாளர் காலஞ்சென்ற ராஜேந்திரன் நாயுடு (ரகு) அவர்களின் அன்பு மனைவி திருமதி. விஜயலட்சுமி அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அபால் நாயுடு - நாச்சியார் அம்மாள் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி நாயுடு - ஜானகி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

ரகுநாத் (சுமங்கலி டெக்ஸ் - கெய்சர் வீதி), துஷியந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரகுநாத் (நியூ டொப் மார்ட்), காயத்ரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நதிஸ், ரிதிஷ், சங்ஜிவி ஆகியோரின் அவ்வாவும்,

பெருமாள் நாயுடு, கௌரவ அம்மாள், பாப்பாத்தி அம்மாள், பரசுராமன், கிட்ணசாமி, ராமராஜ் (சுமங்கலி டெக்ஸ் - கெய்சர் வீதி), ராஜேந்திரன் (அம்பிகா ஜீவலர்ஸ்), செங்கமலை அம்மாள், ராஜேஸ்வரி, கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயராம், ஜெயபாலன், ரவிச்சந்திரன் (உதயகுமார்), பாலகிருஷ்ணன், ஜெகதாம்பாள், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலுசாமி நாயுடு, செல்வநாயகி, தியாகராஜா, பூங்கோதை ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை காலை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-09-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2025 04:00)