Mrs. Vijayarasa Thiresamma

Vijayarasa Thiresamma

Date of Birth: 23 June 1953 - Deceased: 25 August 2025

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், இல-12, பெரியதம்பிரான் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விஜயராசா திரேசம்மா அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோன்பிள்ளை - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

விஜயராசா (Gowry Transport) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விஜயகௌரி (சங்கீதா), றஞ்சினி (சரிதா-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னராசா (தவிசாளர்- ஊர்காவற்துறை பிரதேசசபை), பன்னீர்ச்சந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிகா, அஸ்விகா, சஜித், விகாஷ், பபிக்கா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2025 04:00)