திரு. விஜயரட்ணம் தாட்ஷாயனன்
தோற்றம்: 07 மே 1981 - மறைவு: 13 மே 2026
திருகோணமலை - குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், கன்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விஜயரட்ணம் தாட்ஷாயனன் அவர்கள் 13-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் விஜயரட்ணம் - இரத்தினாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், அருந்தவதாஸ் - மகேஸ்வரி தம்பதிரினரின் பாசமிகு மருமகனும்,
லோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்விகாவின் பாசமிகு தந்தையும்,
கலாவிஜி, காலஞ்சென்ற விஜிதபவன், கிரிஜா, துஷ்யந்தன் ஆகியேரின் சகோதரரும்,
காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை, வேதாரணியம், காலஞ்சென்றவர்களான குமரகுருபரன், உருக்குமணிதேவி மற்றும் நவமணி, கோமளாதேவி ஆகியோரின் பெறாமகனும்,
யூஜின் மொறாயஸ், தர்மலிங்கம், சஜிகலா, ககிலன், ஜனார்த்தனன் ஆகியோரின் மைத்துனனும்,
பவித்திரா, சுபிக்க்ஷா ஆகியோரின் சித்தப்பாவும்,
பிறைன், ஹறினி, பிரீத்தி, லக்ஷிதன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 03.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அன்புவழிபுரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
