திருமதி. விஜியகுமாரி கிருபானந்தன்
தோற்றம்: 03 பெப்ரவரி 1967 - மறைவு: 16 ஜூலை 2026
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham/Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விஜியகுமாரி கிருபானந்தன் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமரசாமி - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
மாதகல் வில்வளை மற்றும் மணியர்குளத்தை சேர்ந்த கிருபானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜ்கனமேனன், தனுப்பிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லோகநாதன், இராமநாதன், இரங்கநாதன், வசந்தகுமாரி, நாகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-07-2026 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
