Srimathi. Vimala Pathmanaabasarma
Date of Birth: 12 April 1948 - Deceased: 18 January 2026
குடியிருப்பு சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட எமது ஸ்ரீமதி. பத்மநாபசர்மா விமலா (மாலா) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை, 18.01.2026, இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பரமணியக் குருக்கள், மீனாம்பாள் அம்மாவின் மகளும்,
சுருவில் நடராஜக் குருக்கள், யோகாம்பாளின் மருமகளும்,
அமரர் பத்மநாபசர்மா (வெளிக்கள உத்தியோகத்தர், மலேரியா தடுப்பு இயக்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மட்டக்களப்பு சரவணபவானந்த சர்மாவின் சகோதரியும்
விமலநாதசர்மா (கணக்காளர், செட்டிக்குளம் பிரதேச செயலகம்), பாஸ்கரசர்மா (Switzerland) , பத்மஜா (அதிபர், யா/கல்வியங்காடு இ.த.க. பாடசாலை), சைலஜா (France) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிக்குருக்கள் யோகரஞ்சசர்மா, உமாமகேஸ்வரி, கோமதியின் அன்பு மாமியாரும்
அனந்தராம் , சம்யுக்தா, சாயினி, சந்தோஷ்சர்மா, சனாதனசர்மா, ஜனார்த்தனசர்மா, ஜனவத்ஸசர்மா, யதுநந்தனசர்மா, பிரவீன்சர்மா, விதுஷனி, விஷாலினி, விலக்ஷனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்
இறுதிக்கிரியைகள்:
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல. 52, கடையியற்சுவாமி கோவில் வீதி, நிராவியடில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணிக்கு கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்: குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2026 00:00)
