திருமதி. விமலாம்பிகை பாஸ்கரன்
தோற்றம்: 22 மே 1941 - மறைவு: 17 ஜூலை 2024
திருமதி. விமலாம்பிகை பாஸ்கரன் அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அப்புத்துரை-தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன் (Retired Personal Officer - CEB) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி, பாலமுரளி ஆகியோரின் அன்பு அம்மாவும்,
ஜெயகுமார், மயுரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருஷாந், சுயானி ஆகியோரின் அம்மம்மாவும்,
புவனேஸ்வரி, சரோஜினிதேவி, காலஞ்சென்ற நித்தியமலர், சுந்தரலிங்கம், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற யோகலிங்கம், கருணாதேவி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கடம்பேஸ்வரி, ரகுநாதன், கணேசன் மற்றும் ஆனந்தலிங்கம், சோதிநாதன், வசந்தமலர், காலஞ்சென்ற பரதராஜா, பாலேஸ்வரி, காலஞ்சென்ற குகானந்தன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
