Mrs. Vimalanayaki Sivagurunathapillai (Rathy)

Vimalanayaki Sivagurunathapillai (Rathy)

Deceased: 29 January 2025

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலநாயகி சிவகுருநாதபிள்ளை அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், முக்கந்தர் சின்னத்தம்பி-செல்லமுத்து தம்பதியினரின் மகளும், குமாரசாமி-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும், 

காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலசுதன் (கனடா), சிவசுதன் (பிரித்தானியா), அச்சுதன் (கனடா), சுரநுதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் தாயாரும்,

அஜித்தா (கனடா), துஷாந்தி (பிரித்தானியா), ஜெயரூபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,

சுவாதிக், ஜனவிகா, அமிர்தா, அகல்மதி, அகல்நிலா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-02-2025 சனிக்கிழமை முற்பகல் 10.00 - 5.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2025 05:00)