Mrs. Vimalarojini Ravendra (Mathana)

(Retired English Teacher)

Vimalarojini Ravendra (Mathana)

Date of Birth: 12 October 1949 - Deceased: 30 September 2024

யாழ். சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விமலறோஜினி இரவீந்திரா அவர்கள் 30-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (சதாசிவம்)-ஜெயலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம்-யோகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இரவீந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,

ஷர்மிலன் (இலண்டன்), பிறேமினி, கேமிலன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புனிதமலர் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான ஷைவேந்திரன், லாவண்யா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதிரன் (இலண்டன்), ஆக்சிதன் (இலண்டன்), தஸ்வர்ந்த் (கனடா), டயோனிஷா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற லீவாறோஜினி, புஷ்பறோஜினி, சகீவறோஜினி, வலிகறஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜகோபாலு, காலஞ்சென்ற கந்தசாமி, உதயகுமார், ஐங்கரமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சத்தியேந்திரா, பாலேந்திரா மற்றும் விஜயலக்ஸ்மி, யோகேந்திரா, மனோரதி, பக்தியேந்திரா, இந்திராஜ், குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிதம்பரநாதன்-ராஜேஸ்வரி, காலஞ்சென்ற தவராசா-பிரேமினி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 02-10-2024 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2024 04:00)