திரு. வினாசித்தம்பி செல்வநாயகம்
(முன்னாள் உரிமையாளர் - கலா ரேடிங் கம்பனி, கொழும்பு- மொடேன் ஸ்டோர்ஸ், உதயானந்தா, வவுனியா)
தோற்றம்: 20 மே 1925 - மறைவு: 08 ஆகஸ்ட் 2026
யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வினாசித்தம்பி செல்வநாயகம் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி - சிவகாமிப்பிள்ளை (மாணிக்கம்) தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காரைநகரை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநாயகி (பாப்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கோபாலபிள்ளை, செல்லத்துரை, சுப்பிரணியம் (திருநீலகண்டன்), அன்னபூரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தாட்சாயணி, ஆறுமுகம், ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
வானதி (அமெரிக்கா), Dr. ஆனந்தசிவம் (அவுஸ்திரேலியா), உதயகுமார் (அமெரிக்கா) சிவானதி (அமெரிக்கா), செல்வி (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
தயாளரூபன்), நிர்மலா, கிருஷாந்தி (ரமா), சுந்தர், கங்காதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுரன், Dr.வள்ளிகா (அவுஸ்திரேலியா), கவித்திரா (சட்டத்தரணி), Dr. பாலகுமார், னுச, பிரகீதா, ஓவியா, மாயோன், சேரன், தாமரா, தாரணி, தீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அவாந்திகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2026 புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் இல- 19, ஜினானந்தா மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு-13 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-08-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
