Mr. Vinasithambi Rasarathnam

Vinasithambi Rasarathnam

Date of Birth: 14 February 1948 - Deceased: 02 August 2024

யாழ். மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வினாசித்தம்பி இராசரத்தினம் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி-இராலட்சுமி தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற சபாரட்ணம்-செல்லமுத்து தம்பதயினரின் மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்பு கணவரும்,

காலஞ்சென்ற மாசிலாமணி, பரமேஸ்வரி, விசியாம்பாள், காலஞ்சென்ற தெய்வேந்திரராஜா, கலாராணி, மகேந்திரன் (சுவீடன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், 

உதயகுமார், பிரவகுமார், கிருஷ்ணவேணி (கனடா), சசிகுமார் (சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுபர்ணா, நவதீசனா, அசோக்குமார், ஐயந்தினி ஆகியோரின் மாமனாரும்,

அபிசாந், அபினாஸ், அஸ்னிகா, தேயஸ்வினி, லக்சய் ஆகியோரின் பேரனாரும்,

செல்வராணி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், விமலச்சந்தின், இராமச்சந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரது புகழுடல் 03-08.2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் மாதகல் போதி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2024 04:00)