திரு. விநாசித்தம்பி சந்திரநாயகம்
(ஓய்வுபெற்ற பொறியியலாளர்)
தோற்றம்: 09 ஜனவரி 1947 - மறைவு: 09 மார்ச் 2025
யாழ். தும்பலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. விநாசித்தம்பி சந்திரநாயகம் அவர்கள் 10-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விநாசித்தம்பி - மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தனலக்குமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாங்கனி, பிரவீணா, பிரதீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தில்குமார், கோதாரசர்மா ஆகியோரின் மாமனாரும்,
மதுமிதன், சிவஹரிஷ், அரன், சீரோன், அஹான், ஆவ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சேதுநாயகம், செல்வநாயகி, வல்லிபுரம் மற்றும் ஜெயராஜா, நவமணிதேவி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவீந்திரன், சிவகுமாரன், பஞ்சலிங்கம், இராமகிருஷ்ணன், விஜயலக்ஷ்மி, காந்தரூபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 1303-2025 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 11:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
