திருமதி. விநாயகம் சரஸ்வதி
தோற்றம்: 12 மார்ச் 1945 - மறைவு: 24 ஜூன் 2026
யாழ். கரவெட்டி கவுந்திலைப் பிறப்பிடமாகவும், தச்சந்தோப்பு வீதி கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கொண்டிருந்த திருமதி. விநாயகம் சரஸ்வதி அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் - இலட்சுமி தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற ஆறுமுகம் - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி தாமரைக்கண்ணன் (பொறியியலாளர் - சிங்கப்பூர்), துளசி (பொறியியலாளர் - அமெரிக்கா), கோமதி (ஆசிரியை - யாழ். விக்கினேஸ்வரா ஆரம்ப பாடசாலை), வைதேகி (ஆசிரியை - யாழ். தேவரையாளி இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வானதி (பொறியியலாளர் - சிங்கப்பூர்), கலாநிதி ரவிச்சந்திரன் (பேராசிரியர் - கிளைம்சன் பல்கலைக்கழகம், அமெரிக்கா), சிவகுமார் (ஆசிரியர் - யாழ். விக்கினேஸ்வரா கல்லூரி), செந்தில் மாதவன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - மருதங்கேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லாசகன் (மொறட்டுவை பல்கலைக்கழக தெரிவான மாணவன்), லாசனா, கஜானா (மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை), திவ்யா (பயோ மெடிக்கல் எஞ்சினியரிங் ஜியோஜியா இன்ஸ்ரிரியூற் ஒஃப் ரெக்னோலஜி), யதுசரண், ஹரிகரன் (யாழ். ஹாட்லிக் கல்லூரி), நாரணி (ராபிள்ஸ் பெண்கள் பள்ளி, சிங்கப்பூர்) ஆகியோரின் பேர்த்தியும்.ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-06-2026 புதன்கிழமை காலை கரவெட்டி மேற்கில் அமைந்துள்ள அன்னாரது இளையமகள் வைதேகி அவர்களின் இல்லத்தில் நண்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சிவகுமார் (மருமகன்):- +94 77 615 5618
செந்தில்மாதவன் (மருமகன்):- +94 77 237 9715
www.tamilthakaval.org
